IND vs NZ 3rd ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு…, முழு விவரம் உள்ளே!!

0
IND vs NZ 3rd ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு..., முழு விவரம் உள்ளே!!
IND vs NZ 3rd ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு..., முழு விவரம் உள்ளே!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் யார் யாரெல்லாம் பிளேயிங் லெவனில் களமிறங்குவார் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

IND vs NZ:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை நாளை இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரில், இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளை வென்றதுடன் தொடரையும் கைப்பற்றி விட்டது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெறும் நோக்கிலேயே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதே போல, நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டி களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டியில், ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அல்லது சிராஜ் இவர்களில் ஒருவரை நீக்கி விட்டு உம்ரான் மாலிக்-க்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயசு நயனை பார்த்துள்ளீர்களா? மாடர்ன் அழகில் கொள்ளாமல் கொள்ளும் அனிகா சுரேந்தர்!!

மேலும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் அசத்தி வந்த சுப்மன் கிலுக்கு பதில், இஷான் கிஷன் தொடக்கம் தரக்கூடும். கடந்த இரண்டு போட்டிகளிலிலும் விளையாடாத ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ 3rd ODI எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் xi:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரஜத் படிதார், ஹர்திக் பாண்டியா, ஷாபாஸ் அகமது, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here