இந்திய அணியை எச்சரித்த நியூசிலாந்து வீரர்…, அப்படி என்ன தப்பு செஞ்சாங்க??

0
இந்திய அணியை எச்சரித்த நியூசிலாந்து வீரர்..., அப்படி என்ன தப்பு செஞ்சாங்க??
இந்திய அணியை எச்சரித்த நியூசிலாந்து வீரர்..., அப்படி என்ன தப்பு செஞ்சாங்க??

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்ற பிறகு, நியூசிலாந்தின் முன்னாள் வீரர் இந்திய அணியை எச்சரித்துள்ளார்.

IND vs NZ:

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நேற்று டி20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில், சூர்யகுமாரின் அதிரடியான பேட்டிங்கினாலும், தீபக் ஹூடாவின் அசத்தலான பவுலிங்கினாலும் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதில், நியூசிலாந்து அணியானது, 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், இவர் பவுலிங் செய்ய வில்லை. இவரது ஓவரை தீபக் ஹூடா தான் வீசினார். இதற்கு தான், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நியூசிலாந்து முன்னாள் வீரர், சைமன் டவுல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போட்டியை போல தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் பந்து வீசினார். நேற்று நடந்த போட்டியில், முதலில் ஸ்ரேயாஸ் ஐயரை தான் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். ஆனால், அவர் ஏன் முன்வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே போட்டியில் இத்தனை சாதனையா?? விஜய் ஹசாரே டிராபியில் அசத்தி வரும் தமிழ்நாடு அணி!!

இதனை தொடர்ந்து, கிரிக்கெட்டை பொறுத்தவரையில், ஒரு வீரருக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே தான் தெரிந்திருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதனை தான், ஹர்திக் பாண்டியாவும் போட்டி முடிந்த பிறகு கூறியிருந்தார். அதாவது, பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here