எகிறும் எதிர்பார்ப்பில் IND vs NZ 2nd ODI: ராய்ப்பூர் கைகொடுக்குமா? மாபெரும் சாதனையை தக்க வைக்குமா இந்தியா?

0
இத நான் செஞ்சே தீருவேன்.., ஆடிப்போன எதிரணி வீரர்கள்.., அப்போ உலக கோப்பையில் மாஸ் சம்பவம் இருக்கு!!!
இத நான் செஞ்சே தீருவேன்.., ஆடிப்போன எதிரணி வீரர்கள்.., அப்போ உலக கோப்பையில் மாஸ் சம்பவம் இருக்கு!!!

முதல் சர்வதேச போட்டி நடைபெற உள்ள ராய்ப்பூர் மைதானமானது, இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு கைகொடுக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த மைதானத்தில், சர்வதேச அணிகள் மோதும் போட்டி இதுவரை நடைபெறாத நிலையில், இன்று முதன் முறையாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. 65 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய இந்த மைதானத்தில், முதல் முறை சர்வதேச போட்டி நடைபெற இருப்பதால், அதை காண தற்போது வரையிலும் 60 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மைதானமானது, பேட்டிங்க்கும் வேகப்பந்து வீச்சுக்கு அதிக பலன்களை தர கூடியது. இதனால், இரு அணிகளும் தங்களது ஸ்கோரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று நடைபெறவிருக்கும் போட்டியில், இந்திய அணி வென்றால், தொடரை கைப்பற்றுவதுடன், சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழக்ககாத அணியாக இந்திய அணி திகழும். இதுவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 114 போட்டிகளில் மோதி உள்ளதில், இந்திய அணி 56ல் வெற்றி, 50ல் தோல்வி மற்றும் 1 ல் டிரா செய்தும் உள்ளது. இதில், 7 போட்டிகள் முடிவு இல்லாமலும் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here