இந்திய அணியானது 2023 ODI உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (நவம்பர் 15) முதல் தொடங்குகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலியின் கடந்த கால வரலாற்றை பற்றி இதில் காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
அதைப்பற்றி பார்க்கையில், விராட் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ODI உலக கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். அந்த போட்டிகளில் அவர் 9, 1,1 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதாவது 3 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனாலும் மறுபக்கம் அவர் தற்போது சிறந்த ஃபார்மல் இருப்பதால் இந்த ஆட்டத்திலும் தனது அதிரடியை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC “குரூப் 4” தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு., இப்போதே இது கட்டாயம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!