நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலபரீட்சை…, வெற்றியுடன் தொடங்க போவது யார்??

0
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலபரீட்சை..., வெற்றியுடன் தொடங்க போவது யார்??
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலபரீட்சை..., வெற்றியுடன் தொடங்க போவது யார்??

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின், டாஸ், மைதானம் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.

IND vs NZ:

நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடர்களில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்த உள்ளார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்ததால், கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய அணி இன்று களமிறங்கும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டி நடைபெறும் மைதானமானது, பேட்டிங் மற்றும் சுழலுக்கு சாதகமாக உள்ளது. இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருநாள் தொடரில், காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் விலகியதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சூரிய குமாருக்கு அதிக வாய்ப்பு இருக்க கூடும். மேலும், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணியில் இல்லாத நிலையில், இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா தரமான பிளேயிங் லெவனுடன் களமிறங்குவதுடன், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் வீரர்கள்:

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகமது ஷமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here