இந்திய அணிக்கு கிடைத்த புதிய கேப்டன்…, பிசிசிஐ-யே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

0
இந்திய அணிக்கு கிடைத்த புதிய கேப்டன்..., பிசிசிஐ-யே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!
இந்திய அணிக்கு கிடைத்த புதிய கேப்டன்..., பிசிசிஐ-யே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்திய அணியானது, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், புதிய கேப்டனை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது கடந்த ஒரு வருட காலமாக, முதுகு வலி காயத்தில் அவதிப்பட்டு வந்த முன்னணி பந்து வீச்சாளர் பும்ரா தற்போது முழு உடல் தகுதி பெற்று மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். இவரது, சோதிக்கும் வகையில் பும்ராவையே பிசிசிஐ அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 அணிக்கு கேப்டனாக அறிவித்துள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

விறுவிறுப்பான ஆட்டம் சமனில் முடிவு…, 7 வது முறையாக கோப்பையை பிரிந்து கொண்ட அணிகள்!!

அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய T20 அணி:

ஜஸ்பிரித் பும்ரா (சி), ருதுராஜ் கெய்க்வாட் (விசி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜிதேஷ் சர்மா (WK), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here