இந்திய அணியில் புதிய அவதாரம் எடுக்கும் 360 டிகிரி நாயகன்?? வெளியான முக்கிய தகவல்!!

0
இந்திய அணியில் புதிய அவதாரம் எடுக்கும் 360 டிகிரி நாயகன்?? வெளியான முக்கிய தகவல்!!
இந்திய அணியில் புதிய அவதாரம் எடுக்கும் 360 டிகிரி நாயகன்?? வெளியான முக்கிய தகவல்!!

சர்வதேச ஆடவர் இந்திய அணியானது, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, டி20 தொடரையும் இந்த இரு அணிகளும் விளையாட இருக்கிறது. இதன் பிறகு, இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. இந்த தொடருக்கு, இந்தியாவின் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வளிக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன் அணியை வழி நடத்த உள்ளார். இதை போல, இந்திய அணியின் டி20 கேப்டனான ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என்பது கேள்விக்குறிதான். இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் இந்தியாவின் டி20 அணியை வழி நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here