பாகிஸ்தானுடன் பைனலில் மோதப்போவது யார்? இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலப்பரீட்சை!!

0
பாகிஸ்தானுடன் பைனலில் மோதப்போவது யார்? இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலப்பரீட்சை!!
பாகிஸ்தானுடன் பைனலில் மோதப்போவது யார்? இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பலப்பரீட்சை!!

டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

டி20 உலக கோப்பை:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் போட்டியிட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தானுடன் இறுதி போட்டியில் மோதும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தாலும், அதற்கு இங்கிலாந்து அணி கடும் நெருக்கடி கொடுக்க கூடும். இந்த நெருக்கடியை இந்திய பேட்ஸ்மேன்களான கே எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் உள்ளிட்டவர்கள் எதிர்கொண்டு அணியை வெற்றி பாதைக்கு வழி நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடியான இந்திய மகளிர் படை தயார்…, FIH நேஷனல் கோப்பையுடன் நாடு திரும்புவார்களா??

இதே போல, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி இவர்களின் வேகத்திலும், அஸ்வினது சுழலிலும் சிக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here