#INDvsENG இந்திய 11 அணியில் வாஷிங்டன் சுந்தர் – இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளனர். தற்போது அதற்கான அணிகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது முதலாவதாக டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். இவர்களுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில மணி நேரத்தில் அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். தற்போது இன்று நடக்கவுள்ள போட்டி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் மொதேரா கிரிக்கெட் மைதானம் – நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம்!!

இன்றைய போட்டியில் தற்போது இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். தற்போது இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இரு அணிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் பெயர் பட்டியல்:

ரோஹித் சர்மா, சுப்மங் கில் , புஜாரா, விராட் கோஹ்லி (C), ரஹானே, ரிஷாப் பண்ட், சுந்தர், அக்சர் படேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ராஹ்.

இங்கிலாந்து அணியில் விளையாட போகும் 11 வீரர்களின் பெயர் பட்டியல்:

சிப்லே, க்ராவிலே, பேரிஸ்டோ, ரூட்(C), ஸ்டோக்ஸ், போப், போகஸ், லீச், ஆர்ச்சர், ப்ரோட், ஆண்டர்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here