IND vs ENG TEST: டெஸ்ட் தொடரை தவற விட்ட விராட் கோலி…, உண்மை காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!!

0
IND vs ENG TEST: டெஸ்ட் தொடரை தவற விட்ட விராட் கோலி..., உண்மை காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளனர். இதையடுத்து, 3 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த 3 போட்டிகளில் இருந்தும், விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் விலகி உள்ளதாகவும், அவரது முடிவை பிசிசிஐ முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுலின் பங்கேற்பு பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IND vs ENG மீதமுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (சி), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கே எல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கே எஸ் பாரத் (WK), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here