திறமையான அணி இது தான் என தீர்மானிக்க முடியாது…, மனம் திறந்த ரோஹித் சர்மா!!

0
திறமையான அணி இது தான் என தீர்மானிக்க முடியாது..., மனம் திறந்த ரோஹித் சர்மா!!
திறமையான அணி இது தான் என தீர்மானிக்க முடியாது..., மனம் திறந்த ரோஹித் சர்மா!!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

IND vs ENG:

இந்திய அணி நாளை டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், நேற்று பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அடி தற்போது சரியாகி விட்டது என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, சூப்பர் 12 சுற்றுகளில் (நாக் அவுட்) சிறப்பாக செயல்படுவது என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த சுற்றில் பலம் வாய்ந்த இரு அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வெளியேறியது அதிர்ச்சியான ஒன்றுதான். இதனால், நாக் அவுட்டில் விளையாடிய ஒரு சில மோசமான போட்டிகள் மூலம் இவர்கள் இப்படித்தான் என தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எதிரணியை திணற வைத்த பிரபல அணி…, ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்!!

மேலும், நாம் இந்த இடத்தில் இருக்கிறோம் என்று பெருமை கொள்வதுடன் நாளை போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். இதன் பின் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்துள்ளோம். இதனால், நாளைய போட்டியில் ஒரு கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here