IND vs ENG 2nd Test: 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…, பும்ராவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து!!

0
IND vs ENG 2nd Test: 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..., பும்ராவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து!!
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணியை வென்ற நிலையில், 2வது போட்டி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 396 ரன்களும், இங்கிலாந்து அணி 253 ரன்களும் எடுத்திருந்தனர்.
140 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் 255 ரன்கள் குவித்தது. இதன் மூலம், 395 ரன்களை இலக்காக கொண்டு தனது 2வது இன்னிங்கிஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 292 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய வீரர்களின் அதிகபட்ச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள்,

  • முதல் இன்னிங்ஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 209 ரன்கள்
  • 2வது இன்னிங்ஸ் – சுப்மன் கில் – 104 ரன்கள்
  • பும்ரா – 9 விக்கெட்டுகள்
  • குல்தீப் யாதவ் – 4 விக்கெட்டுகள்
  • அஸ்வின் – 3 விக்கெட்டுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here