IND vs ENG 2nd TEST: 396 ரன்களுக்கு சுருண்ட இந்தியா…, இரட்டை சதம் விளாசிய இளம் நட்சத்திரம்!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான யுத்தத்தில் இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இந்த தொடரில், 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், நேற்று (பிப்ரவரி 2) முதல் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய நாள் முடிவில்  93 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்திருந்தது.
இதையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179* மற்றும் அஸ்வின் 5* ரன்களுடன் 2 ஆம் நாள் ஆட்டத்தை இன்று (பிப்ரவரி 3) தொடங்கி உள்ளனர். இவர்களில், அஸ்வின் 20, பும்ரா 6, முகேஷ் குமார் 0 ரன்களில் வெளியேறினார். இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சராசரியாக 35 ரன்கள் கூட எடுக்காத நிலையில், இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தது அசத்தி இருந்தார். இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ஓவரில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ் 8* ரன்களுடன் களத்தில் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here