IND vs ENG 2nd Test Day 2:  பும்ரா வேகத்தில் சிக்கிய இங்கிலாந்து…, 171 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!!

0

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இழந்த இந்திய அணி 2வது போட்டியில் விவேகமாக விளையாடுகிறது. அதாவது, 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 396 ரன்களை குவித்திருந்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி பும்ரா மற்றும் குல்தீப் யாதவின் வேகத்தில் சிக்கி 253 ரன்களுக்குள்ளேயே சுருண்டது. இதில், பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனால், 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15*, ரோஹித் சர்மா 13* ரன்கள் என 28 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இதன் மூலம்,  2 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here