IND vs ENG 2nd TEST: இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்…, முதல் நாளில் இந்தியா 336 ரன்கள் குவிப்பு!!  

0
சர்வதேச இந்திய அணியானது, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில் இன்று (பிப்ரவரி 2) 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 14 ரன்களில் வெளியேறி பெரும் ஏமாற்றத்தை தந்தார்.
இவரை தொடர்ந்து, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, ரஜத் படிதார் 32, அக்சர் படேல் 27, ஸ்ரீகர் பாரத் 17 சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால், தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 17 பவுண்டரி 5 சிக்ஸர் என 179* ரன்கள் குவித்து அசத்தி 1உள்ளார். இதன் மூலம், இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 93 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179* மற்றும் அஸ்வின் 5* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து சார்பாக ரெஹான் அகமது மற்றும் சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டுகளும், டாம் ஹார்ட்லி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here