பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா விலகல்?? மாற்று வீரரை தேர்வு செய்த பிசிசிஐ ??

0
பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா விலகல்?? மாற்று வீரரை தேர்வு செய்த பிசிசிஐ ??
பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா விலகல்?? மாற்று வீரரை தேர்வு செய்த பிசிசிஐ ??

பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா விலகியதை அடுத்து, டெஸ்ட் தொடரிலும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜடேஜா:

இந்திய அணி தற்போது, நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டியையும், 2 டெஸ்ட் தொடரையும் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐயானது முன்னரே அறிவித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கான இந்திய அணியில், சில மாதங்களுக்கு முன் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருந்த ஜடேஜாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவரது உடல் தகுதியை பொறுத்தே பங்களாதேஷிற்கு எதிராக களமிறங்குவார் என BCCI குறிப்பிட்டிருந்தனர்.

ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா…, ஒரு கோலால் மாறிய ஆட்டம்!!

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு, ஒருநாள் தொடருக்கான அணியில் ஜடேஜாவுக்கு பதில் ஆல் ரவுண்டரான ஷாபாஸ் அகமதை பிசிசிஐ மாற்றியது. தற்போது, டெஸ்ட் தொடரிலும், ஜடேஜாவுக்கு மாற்று வீரராக சவுரப் குமாரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுரப் குமார் இதுவரை இந்தியாவின் லிஸ்ட் A அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here