பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா…, அரையிறுதிக்கு முன்னேற போவது யார்??

0
பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா..., அரையிறுதிக்கு முன்னேற போவது யார்??

அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோத உள்ளன.

டி20 உலக கோப்பை 2022:

டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 2 வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து இன்று போட்டியிட உள்ளது. இந்த போட்டியானது, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இம்மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகமானது என்பதால், இரு அணி வீரர்களும் ரன் மழை பொழிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்க கூடும். எனவே, இந்திய அணி டாஸ் வென்றால், முதலில் பவுலிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியானது, இரு அணிகளும் அரையிறுதிக்கு நுழைவதற்கான முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இதில், இந்திய அணியை பொறுத்த வரையில், பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட்ட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதாவது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக் முதுகு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியதால், இன்றைய போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் லெவன் வீரர்கள்:

ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், அஸ்வின், புவனேஸ்வர், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here