இந்திய அணிக்கு சவால் விட்ட பங்களாதேஷ் கேப்டன்…, நாளைய போட்டியில் வெல்ல போவது யார்??

0
இந்திய அணிக்கு சவால் விட்ட பங்களாதேஷ் கேப்டன்..., நாளைய போட்டியில் வெல்ல போவது யார்??
இந்திய அணிக்கு சவால் விட்ட பங்களாதேஷ் கேப்டன்..., நாளைய போட்டியில் வெல்ல போவது யார்??

டி20 உலக கோப்பை தொடரில் நாளை இந்திய அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் கேப்டன் இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

IND vs BAN:

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் நாளை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது, ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை குரூப் 2 வின் புள்ளிபட்டியலில், 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முயற்சித்து மட்டும் வருவதால், இந்த முறை கோப்பையை வென்றாக வேண்டி போராடி வருகிறது. இதனால், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாகிஸ்தான் கேப்டனுக்கு இந்திய வீரர் கொடுத்த அட்வைஸ்…, இத பாபர் அசாம் ஏற்பாரா??

இந்நிலையில், பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக கோப்பையை வெல்ல வேண்டும் நோக்கத்துடன் இந்தியா நாளை எங்களை எதிர்கொள்ளும் என கூறிய இவர், எங்களுக்கு அந்த நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், நாளைய போட்டியில் நாங்கள் வென்றால் இந்திய அணி கவலைப்படும். அதற்காகவே முடிந்த அளவுக்கு இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று சவால் விட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here