IND vs BAN: தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு அபராதம்…, எதுக்குன்னு தெரியுமா??

0
IND vs BAN: தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு அபராதம்..., எதுக்குன்னு தெரியுமா??
IND vs BAN: தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு அபராதம்..., எதுக்குன்னு தெரியுமா??

இந்திய அணிக்கு, பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டியில் 80 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி அபராதம்:

பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், பல்வேறு விமர்சனங்களுக்கு இந்திய அணி உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணிக்கு நேற்று நடந்த இந்த போட்டியில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ஒரு போட்டி நடைபெறுவதற்கு குறிப்பிட்ட நேரமே ஒதுக்கப்படும். நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட நான்கு ஓவர்கள் தாமதமாக வீசப்பட்டுள்ளதாக ரோஹித் சர்மா மீது குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் எழுந்தன.

ரோஹித் சர்மா என்ன தான் பன்றாரு…, சரமாரியாக கேள்வி எழுப்பிய இந்திய முன்னாள் வீரர்!!

இதனை ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டதால், மேல் விசாரணை எதுவும் செய்யாமல், ஐசிசி விதிப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிப்படி, ஒரு ஓவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் என, 4 ஓவருக்கு 80 சதவீதம் என இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி 40 வது ஓவருக்கு பிறகு பதட்டம் அடைந்ததால், இந்த தாமதம் ஏற்பட்டிருக்கும் என கூறப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here