
பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி வென்ற நிலையில், தொடரின் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை கடந்த மாதம் 9ம் தேதி முதல் விளையாடியது. இந்த டிராபியின் முதல் இரண்டு போட்டிகளை கைப்பற்றிய இந்திய அணி, 3 வது போட்டியை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. மேலும், இந்த டிராபியின் கடைசி போட்டியை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி டிராவில் முடித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனாலும், இந்திய அணி முதல் 2 போட்டிகளை வென்றதன் மூலம், 2-1 என்ற கணக்கில் டிராபியை வென்றுள்ளது. இந்த டெஸ்ட் டிராபியின் நாயகனாக இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த டிராபியில் அஸ்வின் 25, ஜடேஜா 22 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் பேட்டிங்கிலும் தங்களது பங்கை சிறப்பாக வெளிப்படுத்தி, ஆல் ரவுண்டராக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ICC: பிப்ரவரி மாதத்திற்கான “player of the month” விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!
இந்த டிராபியை வாங்கிய ரோஹித் சர்மா, டெஸ்டின் அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் கே எஸ் பரத் இவர்களிடம் கொடுத்து வெற்றியை கொண்டாடினார். இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வீரர்கள் அனைவரும் தோனியின் வழியை பின்பற்றி வருகின்றனர் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.