இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா படை அறிவிப்பு…, அணி விவரம் உள்ளே!!

0
இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா படை அறிவிப்பு..., அணி விவரம் உள்ளே!!
இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா படை அறிவிப்பு..., அணி விவரம் உள்ளே!!

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அலிசா ஹீலி வழி நடத்த உள்ளார்.

IND vs AUS T20:

சர்வதேச இந்திய மகளிர் அணி, கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 7 வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. இதன் பிறகு, இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முன், இந்திய அணி காமன்வெல்த் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடுமையாக போராடி தோல்வி அடைந்ததால், வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த இரு அணிகளும் அடுத்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மோதி கொள்ள உள்ளது. இந்த தொடருக்காக, இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

கடலில் மூழ்கிய சஞ்சு சாம்சன்…, தத்தளிக்கும் உம்ரன் மாலிக்…, ரிஷப் பந்தை மட்டும் காப்பாற்றும் பிசிசிஐ!!

இந்த தொடர்கள் முறையை, டிசம்பர் 9, 11, 14, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அலிசா ஹீலி வழி நடத்த உள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி: அலிசா ஹீலி (கேப்டன் ), தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன் ), நிக்கோலா கேரி, டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், ஹீதர் கிரஹாம், கிரேஸ் ஹாரிஸ், கிம் கார்த், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷூட் அன்னாபெல் சதர்லேண்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here