
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, எளிதில் தனது விக்கெட்டை பறிகொடுக்காத இந்திய வீரராக அக்சார் பட்டேல் திகழ்ந்து வருகிறார். அவரது தனித்துவ சாதனை குறித்து இப்பதிவில் காணலாம்.
அக்சார் பட்டேல்:
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி விளையாடப்பட்ட 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2ல் வெற்றி 1ல் டிரா மற்றும் 1ல் தோல்வி அடைந்து தொடரை கைப்பற்றி இருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது இரு அணிகளும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த இரு தொடர்களிலிலுமே இந்தியாவின் முன்கள பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போதும், மிடில் ஆர்டரில் உள்ள ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, டெஸ்ட் தொடரில், ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சார் பட்டேல் இந்திய அணியின் தூண்களாக செயல்பட்டனர். இவர்களில், ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் ஒருநாள் தொடரிலும் அசத்தி வருகின்றனர்.
IND vs AUS 2nd ODI: இந்தியாவை 117 ரன்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா!!
இதில், குறிப்பாக அக்சார் பட்டேல் குறைந்தப்பட்சம், அரைசதம் ஆவது அடித்த பிறகு தனது விக்கெட்டை ஆஸ்திரேலிய அணியிடம் கொடுக்கிறார். இல்லையென்றால், இந்திய அணியில் அனைத்து விக்கெட்டுகளும், சரிந்தாலும், கடைசி வரை களத்திலேயே இன்று அசத்துகிறார். அதாவது, தற்போது வரை இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 84(174), 74(115), 12*(33), 15*(39), 79(113) மற்றும் 29*(29) என அரைசதம் விளாசியே தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.