ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்…, இந்திய வீரர்கள் இதை பயன்படுத்துவார்களா??

0
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்..., இந்திய வீரர்கள் இதை பயன்படுத்துவார்களா??
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்..., இந்திய வீரர்கள் இதை பயன்படுத்துவார்களா??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்பாக பிசிசிஐயானது, இந்திய அணிக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

IND vs AUS:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த டிராபிக்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த டிராபியில் முதல், 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை மட்டும் பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில், விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்புவதுடன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜடேஜாவும் அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால், இந்த டிராபி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

IND vs NZ 3rd T20i: தொடரை வெல்ல காத்திருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!!

இதற்கிடையில், இந்திய அணி இந்த டிராபிக்கு தயாராகுவதற்காக, பிசிசிஐ வழி செய்துள்ளது. அதாவது, முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி நாக்பூரில் 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது, நாக்பூரில் தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here