#INDvsAUS இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தது.

2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 21.2 ஓவரில் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாத்திவ் வேட் 33 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மார்ன்ஸ் (6) அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடி காட்டிய ஜோ பர்ன்ஸ் (51) அரைசதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மேலும் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here