ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்…, சென்னையில் நடத்த திட்டம்மா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்..., சென்னையில் நடத்த திட்டம்மா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்..., சென்னையில் நடத்த திட்டம்மா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

அடுத்த வருடம் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,

சென்னையில் டெஸ்ட் தொடர்:

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து, அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களை இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களுடன் இந்திய அணி நடப்பு வருடத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து இந்திய அணி, தனது சொந்த மண்ணில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாட திட்டமிட்டுள்ளது. இதில், டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ள மைதானங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொடருக்கான, முதல் டெஸ்ட் தொடர், சென்னையின் சேப்பாக்கம், நாகபுரி மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள ஏதாவது ஒரு மைதானத்தில் நடைபெற இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

IND VS NZ T20.., ஜெயிக்கிறதுக்கு ஹர்திக் பாண்டியா செய்ய வேண்டிய விஷயம் இது தான்!!

2, 3 மற்றும் 4 வது டெஸ்ட் தொடர்கள் முறையை டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. கடைசியாக சென்னை மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் இரு டெஸ்ட் தொடர்களில் மோதின. அதன் பிறகு மைதானம் சீரமைப்புக்காக சென்னையில் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடரை சென்னையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here