டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு – IND vs AUS டி20 அப்டேட்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 3வது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ள நிலையில், ஆறுதல் வெற்றி பெரும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.

டி20 தொடர்:

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது. கடைசியாக இந்திய அணி மோதிய 14 சர்வதேச டி20 போட்டிகளிலும் ஒன்றில் கூட தோல்வி அடையாதது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் வைட் வாஷ் வெற்றியை பெற விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணியில் பேட்டிங்கில் கேஎல் ராகுல், தவான் சிறப்பான துவக்கம் அளிக்கின்றனர். மிடில் ஆர்டரில் விராட் கோஹ்லி, சாம்சன் அதிரடியை தொடர வேண்டும். கடைசி நேரத்தில் பவுலர்களை பதம் பார்க்கும் ஹர்திக் பாண்ட்யா, தோனிக்கு பிறகு சிறந்த பினிஷர் ஆக உருவெடுத்துள்ளார். பவுலிங்கில் நடராஜன், சஹால், வாஷிங்டன் சுந்தர் அசத்தி வருகின்றனர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.

விளையாடும் 11 அணி:

ஆஸ்திரேலியா – ஆரோன் பிஞ்ச் (c), மத்தேயு வேட் (wk), ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டி ஆர்சி ஷார்ட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா

இந்தியா – கே.எல்.ராகுல் (wk), ஷிகர் தவான், விராட் கோலி (c), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், தீபக் சாஹர், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here