கோப்பையை தூக்கி கொடுத்த கோஹ்லி, பாண்ட்யா – யார்க்கர் நடராஜன் நெகிழ்ச்சி!!

0

இந்தியாவிற்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர் நடராஜனுக்கு இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் ஹோலி தொடர் கோப்பையை கொடுத்து பாராட்டியுள்ளார்.

தொடரை கைப்பற்றிய இந்திய அணி:

இந்தியாவிற்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 12 வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஆனால் டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் தமிழக வீரர் நடராஜனுக்கு வழங்கினார். அவர் தன தகுதியானவர் எனக்கூறினார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் ஹோலி டி 20 தொடருக்கான டெட்டால் கோப்பையை யாக்கர் நடராஜனிடம் கொடுத்தார்.

இதன்பின் தமிழக வீரர் நடராஜன் சோனி டிவியிடம் தமிழில் பேட்டியளித்தார். இந்திய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்தியிடம் தமிழில் பேசினார். அப்போது கூறியதாவது, ஆஸ்திரேலியா.. ஒரு மிக சிறப்பான டீம் கூட ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றிபெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

தமிழ்வழி மாணவர்களுக்கு TNPSC தேர்வில் 20% இடஒதுக்கீடு!!

அதில், ஆஸ்திரேலியா வந்து.. ஒரு மிக சிறப்பான டீம் கூட ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றிபெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. இங்கு சக வீரர்கள் எனக்கு பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். எனக்கு அது பெரிய நம்பிக்கை கொடுத்தது.

நான் எனது யார்க்கர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன். பிட்சிற்கு ஏற்றபடி பவுலிங் செய்தேன். கேப்டன், கீப்பர் சொன்னபடி கேட்டேன். வேறு மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஐபிஎல்லில் ஆடியபடியே ஆடினேன். நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தியது இல்லை. சிரித்துவிட்டு கடந்துவிடுவேன், கிரிக்கெட் ஆட தொடங்கியதில் இருந்தே அப்படித்தான் என்று நடராஜன் தமிழில் பேட்டி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here