குழந்தை பிறக்கும் முன்பே பறந்த கோஹ்லி, பிறந்தும் செல்லாத நடராஜன் – சுனில் கவாஸ்கர் கமெண்ட்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் மற்றும் பங்கேற்று அடுத்த போட்டிகளில் இருந்து விலகி தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை பார்ப்பதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நாடு திரும்பியுள்ளார். ஆனால் தனக்கு பிறந்த குழந்தையை காண முடியாமல் இளம் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவிலேயே உள்ளார் என்று கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ளது. இதில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்கப் போவதால் நாடு திரும்பினார். இதனை கவாஸ்கர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

தனக்கு குழந்தை பிறக்கப் போவதால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முதலாவது டெஸ்ட் போட்டியில் மற்றும் பங்கேற்று விளையாடி, தற்போது நாட்டிற்கு திரும்ப உள்ளார். காரணம், அவரது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது விராட் அனுஷ்கா தம்பதியருக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது. அதற்காக தான் விராட் கோஹ்லி நாடு திரும்புகிறார்.

இந்தியாவில் பரவியதா புதிய வகை கொரோனா வைரஸ்??

ஆனால் கடந்த மார்ச் மாதமே தமிழக வீரர் நடராஜனுக்கு குழந்தை பிறந்து விட்டது. ஆனால் அப்போது அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி கொண்டிருந்தார். அதற்கு பின் அவர் ஆஸ்திரேலியா சுற்றுக்கான அணியில் இடம் பிடித்தார். அதனால் அவர் அங்கு இருந்தே ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். அப்போதும் அவருக்கு தன் குழந்தையை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் அவர் ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார். தற்போது டெஸ்ட் தொடரில் அவரது பெயர் இல்லை ஆனாலும் அவர் நாடு திரும்பவில்லை. காரணம் வலை பயிற்சயில் ஈடுபடும் பேட்ஸ்மேன்களுக்கு பௌலிங் செய்து பயிற்சி அளித்து வருகிறார். ஒரு ஆட்டத்தின் வெற்றியாளர் மற்றொரு வகை ஆட்டத்தின் பயிற்சி பந்துவீச்சாளரா??இதுதான் கிரிக்கெட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வெவ்வேறு விதிமுறைகள்!! என்று கடுங்கோபத்தோடு விமர்சனம் செய்துள்ளார் கவாஸ்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here