IND vs AUS: “இன்னும் 4 ரன்கள் எடுத்தால் போதும்”…, ஆசிய அளவில் சாதனை படைக்க இருக்கும் ரோஹித் சர்மா!!

0
IND vs AUS:
IND vs AUS: "இன்னும் 4 ரன்கள் எடுத்தால் போதும்"..., ஆசிய அளவில் சாதனை படைக்க இருக்கும் ரோஹித் சர்மா!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் ரோஹித் சர்மா 4 ரன்கள் எடுப்பதன் மூலம் ஆசிய அளவில் சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை வெல்லும் அணி தொடரையும் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி மூலம் இந்தியாவின் ரோஹித் சர்மா ஆசிய அளவில் சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாளை நடைபெற இருக்கும் போட்டியில், ஆசிய அளவில், 10,000 ரன்களை எட்டிய 8ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அடைய இருக்கிறார். இந்த சாதனை ரோஹித் சர்மா அடைய 4 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும். இவர் தற்போது வரை, ஆசிய அளவில் 9996 ரன்களை குவித்துள்ளார்.

ஆஸ்கரை தட்டி தூக்கிய ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’.., இயக்குனர் கார்த்திகிக்கு 1 கோடி காசோலையை வழங்கிய முதல்வர்

இந்த பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் 21741, விராட் கோலி 14685 மற்றும் ராகுல் டிராவிட் 13497 ரன்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, வீரேந்திர சேவாக் 12155, எம் எஸ் தோனி 10840, சௌரவ் கங்குலி 10709 மற்றும் முகமது அசாருதீன் 10558 ரன்கள் எடுத்து, டாப் 7 பட்டியலில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here