
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND VS AUS
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யார் தொடரை கைப்பற்ற போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தொடரின் முன்னிலையில் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் 3 வது போட்டியில் தோல்வியை தழுவி உள்ள இந்திய அணி வரும் 9 ம் தேதி நடைபெற இருக்கும் 4 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். இதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கையில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரான பாட் கம்மின்ஸ் 4 வது டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் புதிய உச்சம் அடைவதே இலக்கு”…, டோக்கியோ ஒலிம்பிக் சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!
இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் இருப்பதால் 4 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவருக்கு பதில் மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் இருப்பார் என்றும் அவரே ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்து வழி நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளனர். முக்கிய வீரர் அணியில் இல்லாதது இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது. மேலும் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவார்கள் என பார்க்கலாம்.