
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் இருவரும் சேர்ந்து 5000 ரன்களை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் – ரோகித்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக அதே அணியுடன் ஒரு நாள் தொடரில் நாளை மோத உள்ளனர். இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததால் ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இன்னொரு பக்கம் இந்திய அணியும் தொடர் வெற்றிகளை கைப்பற்ற போராடுவார்கள் என்று தான் தெரிகிறது. இப்படி இருக்கையில் இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து 5000 ரன்களை எட்டுவதற்கு மாபெரும் வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது. அதாவது இந்த இரு வீரர்களும் இதுவரை நடைபெற்ற ஒரு நாள் தொடரில் பார்ட்னர்ஷிப் அமைத்து 4969 ரன்கள் குவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி படைக்க உள்ள சாதனைகள்…, ஒரே தொடரில் அசத்தி படைப்பாரா??
இவர்கள் இன்னும் 5000 ரன்களை எட்டுவதற்கு 31 ரன்கள் தேவைப்படுகிறது. அதனால் இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த இலக்கை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு மட்டும் நடந்தால் ஒரு நாள் தொடரில் பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய வீரர்கள் என்ற பெருமையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.