#INDvsAUS இந்திய பவுலர்கள் அபாரம் – முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸி!!

0

தற்போது இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இன்று காலை 5 மணி அளவில் மெல்போர்னில் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். கேப்டன் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே இந்திய அணியை சிறப்பாக நடத்தி வருகிறார்.

மேலும் முன்னணி பந்துவீச்சாளர் அஷ்வினை தக்க சமயங்களில் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தி வருகிறார். இதனால் ஆஸ்திரேலிய அணி 134 ரன்களுக்கே தங்களது 5 விக்கெட்களை இழந்து தவித்தது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் களம் வந்தார். அப்போது 55வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் ஒரு ரன் எடுக்க முயன்றார். அப்போது பந்தை பிடித்த உமேஷ் யாதவ் விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட இடம் வீசினர். உடனே பண்ட ஸ்டம்பில் அடித்தார். இதற்கான முடிவு 3ம் நடுவரிடம் விடப்பட்டது.

ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது பேட் உள்ளே வரும் முன் பைல்ஸ் விழுந்தது போல் தெரிகிறது. ஆனால் மற்றொரு கோணத்தில் வேறுமாறு உள்ளதால் நடுவர் நாட் அவுட் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனால் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கோபமடைந்தார். மேலும் ரஹானே இதற்காக களம் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் பலன் ஒன்றும் இல்லை. மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் வார்னே இது அவுட் போல் தான் தெரிகிறது என்ற கருத்தையும் கூறியுள்ளார்.

புதிய வகை கொரோனா பாதிப்பிற்கான 7 அறிகுறிகள்!!

தற்போது அறிமுக போட்டியில் விளையாடும் சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவர் முதல் விக்கெட்டாக மார்னஸ் லபுஷேனை வீழ்த்தியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவர் அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தது மற்றொரு அறிமுக வீரர் சுப்மங் கில். மேலும் சிராஜ் க்ரீன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் ஆஸ்திரேலிய பயணத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. மேலும் இந்திய அணி சார்பில் பும்ராஹ் 4, அஷ்வின் 3, சிராஜ் 2 மற்றும் ஜடேஜா 1 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here