‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் முதல்நாள் ஆட்டநேர முடிவு – இந்திய அணி 1 விக்கெட் இழப்பு!!

0

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 195 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட் :

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் ரஹானே இந்தியா அணியை வழிநடத்தினார். மேலும் இன்று இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி இந்தியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 195 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேனை 48 ரன்களும் மற்றும் டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்துள்ளனர். இந்திய அணி சார்பில் பவுலர்கள் பும்ராஹ் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் அஸ்வின் 3 விக்கெட், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட் மற்றும் ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

அதன்பின் தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார். தற்போது முதல் நாள் ஆட்ட முடிவில் சுப்மங் கில் 28 ரன்களும், புஜாரா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here