இந்திய அணியில் இணைந்த அஸ்வின்…, அப்போ உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுமா??  

0
இந்திய அணியில் இணைந்த அஸ்வின்..., அப்போ உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுமா??  
இந்திய அணியில் இணைந்த அஸ்வின்..., அப்போ உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுமா??  

சர்வதேச இந்திய அணியானது, ஒருநாள் தொடர் வடிவிலான ஆசிய கோப்பையை 8 வது முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்து அசத்தி உள்ளது. தற்போது, இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடரானது, வரும் செப்டம்பர் 23, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில், முதல் இரண்டு போட்டிகளுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, கடைசி போட்டியில் அணியில் இணைந்துள்ளனர். மேலும், அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் இந்திய அணியில் மீண்டும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி:

கே.எல்.ராகுல் (சி), ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா

கடைசி போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (சி), ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here