இதே நாளில் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

0

கடந்த 2003ம் ஆம் ஆண்டில் இதே நாளில் தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் தங்களது ஐசிசி உலக கோப்பை பைனல் போட்டியை விளையாடினர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது.

உலக கோப்பை 2003:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் கடந்த 2003ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இந்த தொடரில் இந்த இரு அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டதால் இரு அணியினரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த இறுதி போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இறுதி போட்டியில் முதலில் பெட் செய்த ஆஸ்திரேலிய அணி மிக சிறப்பாக விளையாடியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் அதிரடி காட்டினார். தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங் 140 ரன்களை குவித்து அசத்தினார். இவரது அதிரடியை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. மேலும் இவரது அதிரடியினால் ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை குவித்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணி 234 ரன்னுக்கு சுருண்டது.

24 நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

மேலும் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. மேலும் இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வு நடந்து தற்போது 18 வருடம் ஆகியும் இந்த புகழ் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. இது வரை ஆஸ்திரேலிய அணி 5 முறை உலக கோப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here