
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்குபவர் குறித்து ஹர்திக் பாண்டியா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை மதியம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒரு நாள் தொடருக்கு ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், கே.எல்.ராகுல், சுப்மான் கில் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஏற்கனவே டெஸ்ட் வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குவதால் நாளைய போட்டியிலும் வெற்றி கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணி வீரர்களில் யார் தொடக்க வீரர்களாக களமிறங்குவார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
அதாவது இத்தனை நாள் தொடக்க வீரராக ராகுல் களமிறங்கிய நிலையில் நாளைய போட்டியில் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா நாளைய போட்டியில் ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே நாளைய போட்டியில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.