இந்தியாவில் உலக கோப்பை தொடரின் 13 வது சீசனுக்கான இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடனே விளையாடி வந்தது. அதாவது, வந்த வேகத்தில் சுப்மன் கீழ் 7 ரன்களில் வெளியேற, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், ரோஹித் சர்மா 47 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஸ்ரேயாஸ் ஐயர் 4, விராட் கோலி 54, ஜடேஜா 9, கே எல் ராகுல் 66 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து, முகமது ஷமி 6, பும்ரா 1, சூர்யகுமார் யாதவ் 18, குல்தீப் யாதவ் 10 ரன்களில் வெளியேற இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்களுக்குள் சுருண்டது. முகமது சிராஜ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிங் கோலி…, முதல் இந்தியரும் இவர் தானா??