
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கே எல் ராகுல் இடத்தை சுப்மன் கில் பிடித்துள்ளார்.
IND vs AUS:
இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3 வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ளது. இந்த போட்டியில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யார் தொடக்கம் தருவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒருவாரமாக நிலவி வந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, சமீபகாலமாக பார்மின்றி உள்ள கே எல் ராகுல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இருந்து துணை பதவியை இழந்தார். இதனால், இவர் பிளேயிங் லெவன் இடம் பெறுவது பெரும் கேள்வி குறியாகி இருந்து வந்தது. மேலும், நடப்பு வருட தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர் சுப்மன் கில், இவரது இடத்திற்கு சரியாக இருப்பார் எனவும் கருதப்பட்டு இருந்தது. இதனாலேயே ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கப் போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கே எல் ராகுல் இடத்தை சுப்மன் கில் பிடித்து விட்டார்.
7வது சம்பள குழு கமிஷன் : அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.,ரூ.27,000 வரை துட்டு கொட்ட போகுது!!
இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.