ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
IND vs AUS:
பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3 வது டெஸ்ட் போட்டி, இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையில் நடைபெற்று வருகிறது. மார்ச் 1ல் (நேற்று) தொடங்கப்பட்ட இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களில் சுருண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.
ஆனால், இந்தியாவின் ஜடேஜா, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் இவர்களின் கூட்டணியால் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து, இன்று தனது 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், ரோஹித் 12, சுப்மன் கில் 5, விராட் கோலி 13, ஜடேஜா 7, ஸ்ரேயாஸ் ஐயர் 26, ஸ்ரீகர் பரத் 3 என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – மார்ச் 4 ஆம் தேதி மதிப்பீட்டு தேர்வு!
ஒரு புறம் நிதானமாக விளையாடிய புஜாரா 59 ரன்கள் கடந்து பெவிலியன் திரும்பினார். இவரை தொடர்ந்து, அஸ்வின் 16, உமேஷ் யாதவ் 0, முகமது சிராஜ் 0 என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்சார் பட்டேல் மட்டும் 15* ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள 3வது நாளில், ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.