IND vs AUS 3rd ODI: தொடரை வெல்ல போவது யார்?? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!!

0
IND vs AUS 3rd ODI: தொடரை வெல்ல போவது யார்?? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!!
IND vs AUS 3rd ODI: தொடரை வெல்ல போவது யார்?? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 வது போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

IND vs AUS:

ஆஸ்திரேலிய அணியானது, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், இதுவரை முடிந்துள்ள இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது போட்டியே இரு அணிகளும் எதிர் நோக்கி இருந்தது. இந்த 3வது ஒருநாள் போட்டியானது, இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சொந்த மண்ணில் தொடரை இழக்காத இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா அணியோ ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால், ஒருநாள் தொடரை வென்றே நாடு திரும்ப வேண்டும் என எண்ணி, இந்திய அணிக்கு கடுமையாக நெருக்கடி கொடுக்க கூடும். மேலும், சென்னை ரசிகர்களின் ஆரவாரத்துடன் போட்டி நடைபெறுகிறது என்பதால் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இவர் தான் சரியானவர்” மும்பை இந்தியன்ஸுக்கு ஐடியா கொடுக்கும் ஹர்பஜன் சிங்!!

நேரம்: மதியம் 1.30 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் HOTSTAR

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (சி), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா

டாஸ்:

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் பில்டிங் செய்ய தயாராகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here