IND vs AUS: தொடரை இழந்ததால் ஐசிசி தரவரிசையில் இந்தியா சரிவு…, மேலும் பல சாதனைகளை முறியடித்த ஆஸ்திரேலியா!!

0
IND vs AUS: தொடரை இழந்ததால் ஐசிசி தரவரிசையில் இந்தியா சரிவு..., மேலும் பல சாதனைகளை முறியடித்த ஆஸ்திரேலியா!!
IND vs AUS: தொடரை இழந்ததால் ஐசிசி தரவரிசையில் இந்தியா சரிவு..., மேலும் பல சாதனைகளை முறியடித்த ஆஸ்திரேலியா!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததால் ஐசிசி தரவரிசையில் சரிவை சந்தித்ததுடன் சில மோசமான சாதனைகளையும் படைத்துள்ளது.

IND vs AUS:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில், பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து, 270 ரன்கள் என்ற இலக்கை துரத்த இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்தியா, 12 வது ஓவருக்கு மேல் அடித்து விளையாடியது. இந்த வேகத்திலேயே, விக்கெட்டையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது. இதனால், இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த தோல்வி மூலம், இந்தியா படைத்துள்ள சில மோசமான சாதனைகள் பின்வருமாறு.

கண்ணுபடும் கட்டழகை காட்டி வாலிபர்களை வசியம் செய்யும் ஷெரின்..,பார்த்து பார்த்து மயங்கி போன இளசுகள்!!

  • இந்த வருட தொடக்கத்தில் இருந்து, அனைத்து தொடர்களையும் வென்ற அணியாக இந்திய அணி திகழ்ந்தது. இதற்கு ஆஸ்திரேலிய அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
  • கடந்த 4 ஆண்டுகளாக, சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழக்காத அணியாக இந்திய அணி வலம் வந்தது. இதற்கும் ஆஸ்திரேலிய அணி இந்த தொடர் மூலம் ஒரு முடிவு செய்துள்ளது.
  • கடைசியாக, ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 2019 ல், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்திய அணியின் இந்த தோல்வியால், ஐசிசியின் ஒருநாள் தரவரிசையிலும் பின்தங்கி உள்ளது. அதாவது, தலா 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here