
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும், மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி உள்ளனர்.
IND vs AUS:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில், விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பில்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சுப்மன் கில், மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா (13) மற்றும் சூர்யகுமார் யாதவ் (0) என மிட்செல் ஸ்டார்க்கின் அடுத்ததடுத்த பந்தில் வெளியேற, கே எல் ராகுலும் 9 ரன்களில் இவரது வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இவர்களில், சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியிலும், மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் டக் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: தோனியின் CSK யா?? ஹர்திக் பாண்டியாவின் GT யா?? முதல் போட்டிக்கான ப்ரோமோ உள்ளே!!
இதனால், தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் தடுமாறி வரும் சூர்யகுமார் யாதவ், அடுத்து வரும் ஒருநாள் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது பெரும் கேள்விக்குறிதான். இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது போட்டியில், 9.2 ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.