IND vs AUS 2nd ODI: இந்திய அணியின் தோல்விக்கு பின் உள்ள சாதனைகளின் சில துளிகள் உள்ளே!!

0
IND vs AUS 2nd ODI: இந்திய அணியின் தோல்விக்கு பின் உள்ள சாதனைகளின் சில துளிகள் உள்ளே!!
IND vs AUS 2nd ODI: இந்திய அணியின் தோல்விக்கு பின் உள்ள சாதனைகளின் சில துளிகள் உள்ளே!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம், சில மோசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது.

IND vs AUS:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில், 117 ரன்களுக்குள்ளே சுருண்டது. இதையடுத்து, இந்த எளிய இலக்கை துரத்த களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் (51*) மற்றும் மிட்செல் மார்ஷ் (66*) அதிரடியாக விளையாடி 11வது ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணி படைத்துள்ள மோசமான சாதனைகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே எல் ராகுல்?? உண்மையை உடைத்த இந்திய முன்னாள் பயிற்சியாளர்!!

  • இந்திய அணி இந்த போட்டியில், 117 ரன்களுக்கு சுருண்டதன் மூலம், சொந்த மண்ணில் 4 வது முறையாக குறைந்தப்பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 78, 100 மற்றும் 112 என இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக பதிவு செய்தது.
  • இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 11 வது ஓவரிலேயே வெற்றி பெற்றதால் (அதிக) 234 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி தோல்வியை அடைய செய்துள்ளது.
  • இந்த 2வது ஒருநாள் போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் 4 பேர் டக் அவுட்டாகி உள்ளனர். இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அடங்குவர்.
  • ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் அரைசதத்தை அடித்துள்ளார்.
  • மேலும், ஹர்திக் பாண்டியா விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் செய்த கேட்ச் “நூற்றாண்டின் சிறந்த கேட்ச்” என வர்ணையாளர்கள் புகழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here