IND vs AUS 2nd ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு!!

0
IND vs AUS 2nd ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு!!
IND vs AUS 2nd ODI: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு!!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

IND vs AUS:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை வெல்லுவதில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இன்று 2வது போட்டி, இந்த இரு அணிகளும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய் எஸ் ராஜா ரெட்டி மைதானத்தில் விளையாடி வருகின்றன.

ஏற்கனவே முதல் போட்டியை இந்திய அணி வென்றுள்ளதால், தொடரை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2வது போட்டியில் களமிறங்கி உள்ளது. இதே போல, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க கூடும். இதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேரம்: மதியம் 1.30 PM
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் HOTSTAR

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்(சி), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

டாஸ்:

ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான 2வது போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here