IND vs AUS: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கைகொடுத்த மும்பை…, சில சுவாரசிய தகவல்கள் உள்ளே!!

0
IND vs AUS: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கைகொடுத்த மும்பை..., சில சுவாரசிய தகவல்கள் உள்ளே!!
IND vs AUS: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கைகொடுத்த மும்பை..., சில சுவாரசிய தகவல்கள் உள்ளே!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், நடந்த சில சுவாரசிய நிகழ்வுகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

IND vs AUS:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்குள்ளே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் பொறுப்புடன் நிதானமாக விளையாடிய, கே எல் ராகுல் (75*) மற்றும் ஜடேஜா (45*) 39.5 ஓவரில் இலக்கை அடைந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என தொடரை கைப்பற்ற முன்னிலை வகிக்கிறது. நேற்று நடந்த இந்த போட்டியில் சில சுவாரசிய நிகழ்வுகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

  • இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 12 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மைதானத்தில் தனது வெற்றியை பதிவு செய்து வைத்துள்ளது. இதற்கு முன் 2011ல் இங்கிலாந்து எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
  • இந்த போட்டியில், தனது 13 வது ஒருநாள் அரைசதத்தை கே எல் ராகுல் பல மாதங்களுக்கு பிறகு அடித்து பார்மை மீட்டுள்ளார்.
  • இந்தியாவின் சுப்மன் கில், இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்ததன் மூலம், இதுவரை விளையாடிய 22 போட்டிகளில் அதிக (1274) ரன்களை விரைவில் கடந்த முதல் வீரராக உள்ளார்.
  • இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 3 வது முறையாக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 141 மற்றும் 181 ரன்களுக்குள் 1946 மற்றும் 2001 ல் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here