இந்தியாவில் கொரோனா எதிரொலி: 3 ஆயிரத்தை கடந்து பயணிக்கும் அவலநிலை., 14 பேர் உயிரிழப்பு!!!

0
இந்தியாவில் கொரோனா எதிரொலி: 3 ஆயிரத்தை கடந்து பயணிக்கும் அவலநிலை., 14 பேர் உயிரிழப்பு!!!
இந்தியாவில் கொரோனா எதிரொலி: 3 ஆயிரத்தை கடந்து பயணிக்கும் அவலநிலை., 14 பேர் உயிரிழப்பு!!!

சீனா, அமெரிக்கா நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தோற்று பரவியதால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் அவல நிலை ஏற்பட்டது. கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அடுத்தகட்ட தாக்குதலை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளிவந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதைத்தொடர்ந்து உலக நாடுகளை சுகாதார மையம் எச்சரித்து வந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா நோயால் ஆங்காங்கே ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் நேற்று மட்டுமே 2,151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. எனவே முக கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை பின்பற்ற மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தனர்.

என்ன ரோஹித் இதெல்லாம்.., தோனியவே மிஞ்சிட்டீங்களே.., இணையத்தில் ரகளை செய்யும் RCB ரசிகர்கள்!!!

இந்நிலையில் இன்று 3,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 14 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 13,509 ஆக உயர்ந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் 1,222 கொரோனா நோயாளிகள் குணமடைந்து இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here