உலகளவில் 32 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய கொரோனா – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

0

2019ம் ஆண்டு மாதம் துவங்கிய கொரோனா பேரலை தற்போது பல்வேறு பரிமாணங்களில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

பல்வேறு பரிணாமங்களில் கொரோனா:

உலகை அச்சுறுத்தும் கொடிய நோயாக பரவிவரும் கொரோனாவானது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் பாதிப்பது மட்டுமல்லாது உயிர் பலி எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது. முதல் அலை கொரோனா தாக்கதை காட்டிலும் இரண்டாம் அலையில் உயிர்பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.83 லட்சத்தை தாண்டியது. அனைத்து நாடுகளிலும் சேர்த்து 3,283,183 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,23,965 ஆக உள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 157,523,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,34,777,022 குணமடைந்து 1,08,617 பேர் கவலைக்கிடமான நிலையிலும் காணப்படுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் பலர் இறந்து கொண்டுள்ளனர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,283,183 ஆக உயர்நது வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதும் கொரோனா பேரிடர் காலத்தை கடக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here