மத்திய மற்றும் மாநில அரசுகள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில முதல்வர்களும், தங்களது நிதியை பொறுத்து பழங்குடியினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நிதியுதவியை மாற்றி அமைத்தும் வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வகையில், புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு (SC, ST) இலவசமாக வழங்கப்பட்டு வந்த வேட்டி, சேலைக்கு பதிலாக ரூ.500 நிதி உதவியாக அரசு வழங்கி வந்தது. தற்போது, இந்த தொகையை ரூ. 1000- மாக உயர்த்தி புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!!