நடப்பு ஆண்டு அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

0

நாட்டில் தானிய உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகளின் நலனுக்காக பிஎம் கிசான் போன்ற திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் 2022-23 விவசாய ஆண்டு முக்கிய பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது மதிப்பீடுகள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, விவசாயிகளின் கடின முயற்சியால் தானிய உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது நடப்பு ஆண்டில் அரிசி – 1355.42 லட்சம் டன், கோதுமை – 1127.43 லட்சம் டன், கம்பு – 111.66 லட்சம் டன், மக்காச்சோளம் – 359.13 லட்சம் டன், மொத்த பருப்பு வகைகள் – 275.04 லட்சம் டன், எண்ணெய் வித்துப் பயிர்கள் – 409.96 லட்சம் டன், பருத்தி – 343.47 லட்சம் பேல்கள், கரும்பு – 4942.28 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த படத்தை பார்த்து இயக்குனரை கழுத்தை நெறித்த தளபதி.., உண்மையை உடைத்த மிஷ்கின்!!

மேலும் இந்த ஆண்டு மொத்த தானிய உற்பத்தி 3305.34 லட்சம் டன்னாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 149.18 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கோதுமை, அரிசி உற்பத்தி தான் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here