தமிழகத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு இறப்பு காப்பீடு உயர்வு., அமைச்சர் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு இறப்பு காப்பீடு உயர்வு., அமைச்சர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு இறப்பு காப்பீடு உயர்வு., அமைச்சர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் திருவிழா, பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளில் வெயில் காரணமாகவோ, மற்ற சில காரணங்களாலோ அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆலைகளில் பணிபுரிவோர்கள் பலரும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களின் குடும்ப நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விபத்து இறப்பு உதவித்தொகை 1.25 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகளுக்கு இந்த 4 நாட்கள் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

மேலும் வெளியிடங்களில் இருந்து வந்து கட்டுமான வேலைகள் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்து மூலம் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here